உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செலுத்தவுள்ள 100 மில்லியன் ரூபா இழப்பீட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

எஞ்சிய பணத்தை செலுத்துவதற்கு 6 வருடகால அவகாசத்தை வழங்குமாறும் அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஓகஸ்ட் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் எஞ்சியுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்திற்கு முன்னர் இழப்பீட்டு தொகையை செலுத்த தவறினால் குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 20ம் திகதிக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமர்று சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சர்டடில் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில் அவருக்கு 100 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள் கப்பலுக்கான விலையினை ஈடு செய்ய முடியாதுள்ளது

பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகள் ரத்து.

மேலும் 63 பேர் பூரண குணம்