உலகம்

டிரம்ப் மீது 05 முறை துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் ?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் காதிலிருந்தும் இரத்தம் சிந்தியது.

இதனையடுத்து ட்ரம்பை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதேயான தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன்போது அவர் சுமார் 05 முறை துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதுடன், இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய தோமஸ் மெத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர்.

இவர் ஏன் ட்ரம்பை சுட முயன்றார் என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related posts

பின்லாந்தில் பரவியது கொரோனா வைரஸ்

காசா சிறுவர் நிதியத்திற்கு 127 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது!

அல்-ஷிபா மருத்துவமனையில் சுரங்கம்- இஸ்ரேல் வெளியிட்ட காணொளி.