அரசியல்

கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், வருமானம் ஈட்டும் வழிகளிலும் மீளமுடியாத வகையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கஷ்டங்கள் நிறைந்த பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜீவித்து வருகின்றனர். நகர்ப்புற வறுமை கூட வியாபித்துள்ளது. இதனால் சமூக விரோத நடவடிக்கைகள் கூட இன்று சமூகத்தில் இடம்பெற்று வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சகல பாடசாலை மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும். மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. மதுப் பழக்கம் ஒரு நாகரீகமற்ற செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பெற்றோர்களும் மதுவைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைப் பின்பற்றுகிறார்கள். எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி நடந்து கொள்ள வேண்டும். சரியானதைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும்.

பணிவாக நடந்து கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரவேசித்து ஸ்மார்ட் கல்வியை முன்னெடுக்க வேண்டும். கல்வி எனும் பெறுமதிமிக்க வளத்தை எவராலும் ஒருபோதும் திருட முடியாது. எனவே பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் நல்ல நாகரீக வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்க சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 309 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு, திம்பிரிகஸ்யாய, சசுமயவர்தன மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (11) இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் பிரதமர் ஹரினி

editor

நான் ஜனாதிபதியாக இருப்பதால் இந்த தேர்தலில் இனவாதமோ மதவாதமோ பேசப்படவில்லை – ஜனாதிபதி ரணில்

editor

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்டு தீர்மானமெடுங்கள் – பிரதமர் ஹரினி

editor