அரசியல்

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை எப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடந்தே தீரும் தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை, எப்போதும் தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான, சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

இலங்கையானது எத்தகைய குறைபாடுகள் உள்ள போதும் 1931ஆம் ஆண்டிலிருந்து சர்வஜன வாக்குரிமையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் நடாகும்.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன .

ஒரு தடவை மட்டுமே உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை. 1981ஆம் ஆண்டிலேயே தேர்தல் நடத்தப்படாது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. 19ஆம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

எனினும் 83 (ஆ) சரத்தில் அது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

அதனை மாற்றுவதற்காகவே யோசனை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் அத்தேர்தல் நடத்தப்படுவது உறுதி. தற்போதைய ஜனாதிபதிக்கு முன்னால் செல்ல முடியும்.

ரிப்போர்ட் கார்ட் உள்ளது. அதனை முன்வைப்போம். அவர் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பர்.

நாம் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். நாம் தேர்தலுக்கு பயப்பட வேண்டிய எந்தக் காரணமும் எத்தகைய அவசியமும் கிடையாது.

வரிசை யுகத்தை இல்லாது செய்துள்ளோம்.

24 மணிநேரமும் மின் விநியோகத்தை வழங்குகின்றோம். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளோம்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.

டொலர் கையிருப்பை அதிகரித்துள்ளோம். இதனால் தேர்தலுக்கு அஞ்சவில்லை. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர்லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

editor

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில்

editor