உள்நாடு

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் “வைர விழா கேட்போர் கூட” நிர்மாண பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச். எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாடசாலை 75ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சின் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ஸாஹிரா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கும், புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (11) இடம்பெற்றது.

கல்முனை கமு/கமு/ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கேட்போர் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் அம்பாரை அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கிரம கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாரை மாவட்ட பொறியியலாளர் ஏ. எம். ஸாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் உட்பட பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை முன்னாள் அதிபர்கள், கல்முனை, சாய்ந்தமருது கல்வி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள், இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

– நூருல் ஹுதா உமர்

Related posts

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைதின் பின்னணி