பல நாடுகள் எமக்கு நன்கொடைகளை வழங்காமல் கடன் நிவாரண உதவிகளையே வழங்கி வருகின்றன. நாம் இவற்றைத் திருப்பிச் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
திருப்பிச் செலுத்துவதில் பெற்ற கடன் உதவியை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் கடனைப் பெற்றால், மூலதனத் தொகை மற்றும் கடன் தொகையின் வட்டி ஆகியவற்றைக் கண்டறிந்து, அந்தத் தொகையைப் பயன்படுத்தி, மூலதனத்திற்கும் வட்டிக்கும் மேலதிகமாக பலன்களைத் தரும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கடன்களை பெற்று நஷ்டத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வகுத்தால், வெற்றியளிக்காத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் கடன் பொறியில் சிக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பசுமைப் பொருளாதாரம் இன்று உலகில் ஒரு முக்கியமான பரப்பாக அமைந்துள்ளது. மேலும் பசுமைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயல்முறைகளை வழிநடத்தினால் பசுமை நிதியை எம்மாலும் பெற்றுக் கொள்ள முடியும். உலகின் பல்வேறு நாடுகளில் பசுமை நிதியங்கள் காணப்படுகின்றன.
சரியான பசுமைக் கொள்கைகளை நாமும் செயல்படுத்தப்படும்போது அந்நிதியங்கள் மூலம் வழங்கப்படும் பசுமை மானியங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இது எமது நாட்டுக்கும் நல்லதொரு கொள்கையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்காலத்தில் கொள்கைகள் உருவாக்கப்படும் போது, எதிர்கால தலைமுறை, அடுத்த தலைமுறை, பிறக்கப்போகும் தலைமுறை குறித்து தூர நோக்கில் சிந்திப்பதில்லை.
தன்னைப் பற்றி சிந்திக்கும் சுயநல செயல்பாட்டிலும் நோக்கத்திலும் நுகர்வு மற்றும் முதலீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.
அடுத்த தலைமுறைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிலைபேறான ஒன்றாக அமைந்து காணப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 303 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, களனி, ஹுனுப்பிட்டிய பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை நடனக்குழுவுக்குத் தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக இயற்கை அழகையும் சூழலையும் பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு பசுமையை மையமாகக் கொண்ட நல்லதொரு நாட்டைப் கையளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால், எமது நாடு பசுமை மானியங்களின் ஊடாக ஒத்துழைப்புகளைப் பெற முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலைபேறான விவசாயம், பசுமை கட்டிடங்கள், பொது போக்குவரத்தினை பசுமையாக மாற்றுதல், கார்பன் வெளியேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைபேறான தாவர வளர்ச்சி, கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட சுற்றுலா, நிலைபேறான மீன்பிடி போன்ற பசுமையை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறக்கூடிய பல கொள்கைகள் மற்றும் பரப்புகள் காணப்படுகின்றன.
இவற்றில் நாம் பசுமை முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
குறிப்பாக, நாட்டின் சகல பிள்ளைகளையும் ஸ்மார்ட் பிள்ளைகளாக உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.
நாம் ஸ்மார்ட் பிரஜையாக இருந்தால், பசுமையை மையமாகக் கொண்ட தேசிய அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கலாம்.
பசுமையை மையமாகக் கொண்ட கொள்கைகளை வகுத்து அதன் ஊடாக இலாபமீட்டும் பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.
பசுமைக் கொள்கைகளை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நகர்ப்புற வறுமை பரவி அதிகரித்துள்ளது. இந்த ஏழை மக்களுக்காக யாரும் பெரிதாக குரல் எழுப்புவதில்லை.
இந்நாட்டில் குரலற்று இருக்கும் பெரும்பான்மையினரின் குரலாக ஐக்கிய மக்கள் சக்தி மாறும். பேச்சால் மட்டுமன்றி செயலாலும் இதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.