உள்நாடு

A/L விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினத்திற்கு பின்னர் எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான காலம் பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

ஷானி உள்ளிட்டோர் விளக்கமறியலில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்