உள்நாடு

இலவச டேட்டாவைப் பெற முடியும் என வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்.

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்தார்.

குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண குறுஞ்செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியும் என செய்தி இந்நாட்களில் அனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறான இணைப்புகளில் இணைந்து தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக வழமையான முறைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த பணிப்பாளர், அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்

வௌ்ளவத்தையில் நிலம் தாழிறக்கம்!

இலங்கை மக்களிடம் மன்னிப்புக்கோரும் மெத்யூஸ்