உள்நாடு

தொழில்நுட்ப கோளாறு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.

தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் நேற்று (08) மாலை 06.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையத்தை நோக்கி பயணித்துள்ள நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் இரண்டு மணிநேர பயணத்தின் பின்னர், மீண்டும் இரவு 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானத்தில் 144 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்துள்ளனர்.

இந்த பயணிகளை வேறொரு விமானத்தின் மூலம் தென்கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

குறைந்துள்ள பொருட்களின் விலைகளில்!

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை தீக்கிரையாகி பல கோடி ரூபா சொத்துக்கள் சேதம்!