உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார். மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு மற்றும் அதன் இடைக்கால மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டுள்ளன.

அதன் மீதான தீர்ப்பு இன்று மதியம் 12.30 மணி அளவில் வௌியிடப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Related posts

O/L பரீட்சைக்கு சென்ற இரு மாணவிகள் மாயம்!

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor