உள்நாடுசூடான செய்திகள் 1

 2 நாட்கள், 200க்கும் மேற்பட்ட அரச சேவைகள் முடங்கும் அபாயம்!

(UTV | கொழும்பு) –    200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானித்துள்ளன. அவற்றில் கிராம சேவகர் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்கியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிப்பதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, அஞ்சல் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினமும் (09) 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏனைய அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார குறிப்பிட்டார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்

சீரான வானிலை….

NMRA விவகாரம் : மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிப்பு