உள்நாடு

சஜித்தால் அரசாங்கத்திற்கு 5,564 மில்லியன் ரூபா நட்டம் :வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

(UTV | கொழும்பு) –    எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் (2015-2019) முறையற்ற வீடமைப்புக் கடன்களை வழங்கியமையால் அரசாங்கத்திற்கு 5,564 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட 53,709 பயனாளிகளின் கடன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவிக்கின்றார். அரசாங்கத்திற்கு எஞ்சியிருக்கும் தொகை 7,852 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 காலப்பகுதியில் 07 வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

மாதிரி கிராமம், விசிறி கடன் உதவி, சிறுநீரக உதவி, விரு சுமித்துரு உதவி, கிராம சக்தி, விசிறி உதவி மற்றும் வெள்ள உதவி திட்டம் போன்ற ஏழு வீடமைப்புத் திட்டமாகும். இந்த முறையற்ற வீட்டுக் கடன்களில் பெரும்பாலானவை 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ராஜீவ் சூரியாராச்சி கூறினார்.

2018 மற்றும் 2019 இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்ற வருடங்களாகும். 2019ஆம் ஆண்டில் மட்டும் 62,994 வீடுகள் நிர்மாணிக்கும் பணி தொடங்கப்பட்டு 40,500 வீடுகளுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2015 மற்றும் 2019 காலப் பகுதிகளில், சஜித் பிரேமதாச 341,510 வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளார், ஆனால் 233,578 வீடுகளுக்கு மட்டுமே தேவையான ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதனால் 107,932 வீடுகளுக்கு தவணைத் தொகை வழங்க முடியவில்லை. காரணம், தேவையான ஏற்பாடுகள் இல்லாததே ஆகும்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் பணியை இடைநிறுத்தி பழைய திட்டங்களை முடிக்குமாறு பணிப்புரை விடுத்தார். இதன்படி, சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுக்கடன் வழங்கும் நடவடிக்கையின் போது, ​​53,709 வீடமைப்பு பயனாளிகள் அதற்குத் தகுதியற்றவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி அவர்களின் எதிர்கால கடன் தவணைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஞ்சிய 45,093 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு 15,327 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதியை திறைசேரியிடம் கோரியுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்படி, அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை பல கட்டங்களில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்த வீடுகளை நிர்மாணித்து பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார். தான் வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பித்த வீட்டுக்கடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

அதற்கு பதிலளித்த தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, தடைசெய்யப்பட்டுள்ள கடன்கள் பிரேமதாசவினால் முறைசாரா முறையில் வழங்கப்பட்ட கடன்கள் எனத் தெரிவித்தார். இந்த கடன் வரம்பு கடனாளிகளின் உடன்படிக்கையின் பேரில் செய்யப்பட்டது என மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு மாஃபியாதான் காரணம்