(UTV | கொழும்பு) –
பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதியின் பதவிக்காலம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நாளை திங்கட்கிழமை (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகரான சமிந்திர தயான் லெனவவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே பெயரிடப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் சார்பில் சட்டமா அதிபரே ஆஜராக வேண்டியுள்ளது. அதன் காரணத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் சட்டமா அதிபருடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரிவாக உரையாடியுள்ளனர்.
குறிப்பாக, 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுக்ள் என்பதோடு அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் அதிகார காலப்பகுதி உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්