(UTV | கொழும்பு) –
ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இணைய மோசடி தொடர்பாக 1,093 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பில் 7,916 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுணுகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த சருக தமுணுகல, இரண்டு மாதங்களுக்குள் சிறுவர்கள், குறிப்பாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්