(UTV | கொழும்பு) –
மலேசியாவின் பிரதான விமான நிலையத்தில் ஏற்ப்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது.
விமான பொறியியல் வசதிகள் பிரிவில் இரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பிரதான சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மயக்கம் மற்றும், குமட்டல் நோய் அறிகுறிகளுக்கு பயணிகள் உள்ளாகியுள்ளனர்.
விமான நிலையத்திலுள்ள வளி அனர்த்த பிரிவுக்கு 14 நோயாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாயு கசிவினால் எந்தவொரு விமானத்திற்கும் அல்லது விமானத்திலிருந்த பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.
9 வருடங்களாக கவனிப்பாரற்றிருந்த ஒரு தொட்டியிலிருந்த வாயு கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக மலேசிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්