உள்நாடுசூடான செய்திகள் 1

70 ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டது!

(UTV | கொழும்பு) –    இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து பலர் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அதனடிப்படையில் பெறுபேறுகள்  வெளியிட்டு பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப். தெளபீக், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இந்த விடயத்திற்காக அதிகம் பாராளுமன்றில் குரல்கொடுத்ததுடன், ஜனாதிபதி, கல்வியமைச்சர், பரீட்சை ஆனையாளர்  உள்ளிட்டவர்களுடன் தொடர்புகளை பேணிவந்ததுடன், ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜூபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், முஷாரப், ஹரீஸ் ஆகியோர் பாராளுமன்றிலும் பேசியிருந்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

தங்கத்துடன் 06 இந்தியர்கள் கைது

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்