(UTV | கொழும்பு) –
அரச சொத்துக்களை விற்பதாயின் அதனை கொள்வனவு செய்வதற்கு முன்வரும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் தொடர்பிலும் அவர்களுக்கு குறித்த அரச நிறுவனங்களை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்ட தீர்மானங்கள் என்ன என்பது குறித்தும் நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மத்தல விமான நிலையம் , ஹில்டன் ஹோட்டல் என்பவற்றை இவ்வாறு மறுசீரமைப்பதாயின் அதில் முதலீடு செய்வதற்கு வருகை தந்துள்ளவர்களுக்கு அதனை வழங்கும் போது பின்பற்றிய செயன்முறைகள் எவை என்பது தொடர்பிலும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டுமென நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாயின் அதற்கு பொருத்தமான நிறுவனங்கள் மற்றும் நபர்களை தெரிவு செய்ய வேண்டியதும் கட்டாயமாகும்.
வெளிப்படைத்தன்மை இல்லாத, திடீர் கொடுக்கல் வாங்கல்களுக்கும் தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை விற்பது தமது கட்சியின் கொள்கை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්