முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் பொது விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிகளுக்குரிய உடையையே அவர் அணிந்திருந்ததாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டு, தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதுவரை அவர் விசேட கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை எனவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
அவரை விசேட வார்டில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.