உள்நாடுசூடான செய்திகள் 1

மு.கா பேராளர் மாநாட்டில் கைகலப்பு: விசாரணைக்கு ஹக்கீம் பணிப்பு.!

ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் 31வது பேராளர் மாநாடு 2024.06.22ஆந் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் உடனடியாக விசாணைகளை ஆரம்பித்து, அது தொடர்பான அறிக்கையினை ஒரு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றவுப் ஹக்கீம் பணித்துள்ளதாக கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. சமால்டீன் தெரிவித்தார்.

குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக கட்சித் தலைவரினால் கட்சியின் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் ,கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் கட்சியின் பிரதி தலைவருமான கலாநிதி ஹிஸ்புல்லா, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் உயர் பீடத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு

Related posts

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்