அரசியல்உள்நாடு

முஸ்லிம் எம்பிக்களின் பெயரை வாசித்து, சிங்கள எம்பிகளை மறைத்த தயாஶ்ரீ!

கொண்டையை மறந்து தொண்டைகிழிய கத்தினார் தயாசிறி.

-கௌரவ கவிந்த ஜெயவர்த்தன (69 மில்லியன்), Dr. Kavinda Jayawardana

கௌரவ அஜித் மன்னப்பெரும (50 மில்லியன்), Ajith Mannapperuma
கௌரவ திலீப் (48 மில்லியன்), Dilip Wedaarachchi
கௌரவ கயந்த கருணாதிலக்க (51 மில்லியன்), Gayantha Karunatilleka
கௌரவ ஹர்சடி சில்வா (50 மில்லியன்), Harsha de Silva
கௌரவ ஹெக்டர் அப்புகாமி (18 மில்லியன்), Hector Appuhamy
கௌரவ அளவத்துவேல (61 மில்லியன்), J.C. Alawathuwala
கௌரவ சஞ்செய் பெரேரா (50 மில்லியன்), Sujith Sanjaya Perera සුජිත් සංජය පෙරේරා
கௌரவ நெல்சன் (50 மில்லியன்), Kins Nelson
கௌரவ சம்பிக்க ரணவக்க (50 மில்லியன்), Patali Champika Ranawaka
கௌரவ ராஜித சேனாரத்ன (50 மில்லியன்), Rajitha Senaratne
கௌரவ ரோகினி குமாரி (63 மில்லியன்),
கௌரவ வேலுகுமார் (60 மில்லியன்), VELU KUMAR
கௌரவ தர்மசேன (50 மில்லியன்)

போன்ற எம்.பிக்களுக்கு மேதகு ஜனாதிபதி ரணில் வழங்கிய நிதியை பற்றி வாய் திறக்காமல் முஸ்லிம் தலைவர்களுக்கு மிகச் சிறியளவில் நிதியொதுக்கியது பற்றி சுதந்திர கட்சி பிரதானிகளில் ஒருவரான கௌரவ தயாசிறி விஜயசேகர நேற்று பாராளுமன்றில் உரத்து பேசினார்.

எளியவனின் தலையில் பொழுது விடிவது போல வடக்கு கிழக்கானின் தலையில் தான் எல்லா பொழுதும் விடிகிறது. யுத்தத்தில் சுத்தமாக அபிவிருத்தி இழந்து தவிக்கும் வடக்கு, கிழக்கை அனாதையாக விட்டு பல ரில்லியன் செலவில் துறைமுகம், கடுகதி பாதைகள், என அபிவிருத்தியின் உச்சம் காணும் தெற்கை பற்றியெல்லாம் கதைக்க முடியாத தயாசிறி போன்றவர்கள் மக்களின் வரிப்பணத்தில் சில நூறு தூசிகள் கிழக்குக்கு வந்தது பற்றி வாய்கிழிய கத்தியதன் பின்னணி என்ன? என்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த 100 மில்லியனை வைத்து கௌரவ இசாக் எம்.பி (Ishak A Rahuman) அனுராதபுரத்தில் எதை பெரிதாக சாதிக்க முடிந்திருக்கும். அதுபோலவே அமைச்சராக இருந்து பலகோடிகளை செலவழித்து பழகிப்போனதுடன் யுத்தத்தினால் வீழ்ந்து கிடக்கும் வடக்கில் 84.49 மில்லியனை வைத்து நாக்கை கூட றிசாத் எம்.பியால் (Rishad Bathiudeen) வலிக்க முடியாமல் போகி இருக்கும். இதை ஏதோ பல நூறாயிரம் கோடியை முஸ்லிம் எம்.பிக்களுக்கு ரணில் ஒதுக்கியது போல இனவாதமாக தனது முகத்தை வெளிக்காட்டியுள்ளார் தயாசிறி. (Dayasiri Jayasekara)

மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளான ஹரீஸ் (HMM Harees Mohamed Harees) , பைசால் (Faizal Cassim), (Seyed Ali Zahir Moulana) மௌலானாவுக்கு ஆளுக்கு 10 கோடி என மொத்தமாக 30 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. எந்த ஒரு அமைச்சரும் இல்லாத கிழக்கு மாகாணத்தில் முஸ்லிங்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மாகாணம் மாற்றந்தாய் பிள்ளைகள் போலவே தெற்கின் அரசியல் சக்திகளினால் நடத்தப்படுகிறது என்பதை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது. சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலரும் இருந்தும் ஏமாளிகளாகவே தெற்கின் அரசியல் சக்திகளினால் கிழக்கு மக்கள் நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பதை தயாஸ்ரீயின் நேற்றைய உரை மூலமும் வலுப்பட்டு கொண்டது.

விலைவாசி கூடிய இந்த காலத்தில் அந்த 30 கோடியையும் வைத்து கிழக்கில் இவர்கள் என்னதான் செய்ய முடியும். ஏதோ இலங்கையை புரட்டிபோடுமளவுக்கு நிதியொதுக்கியது போல தயாசிறி பேசினார். அவரின் பேச்சில் அதிகார மோகமும், கிழக்கின் மீதான கோபமும், இனவாதமும் அப்பட்டமாக வெளிவந்தது. சிங்கள தமிழ் எதிரணி எம்.பிக்களை மறந்து முஸ்லிம் எதிரணி எம்.பிக்களை மட்டும் கட்டம் கட்டியது ஏன் என்ற கேள்விக்கு நாம் விடை தேடவேண்டியும் உள்ளது. அவரது உரைக்கு பின்னால் இருந்த சமூகத்துரோகிகள் முஸ்லிம் சமூகம் களையெடுக்க வேண்டிய நச்சு விதைகள். அவர்கள் யார் என்பது காலம் வெளிச்சம் போட்டு காட்டும்.

முஸ்லிம் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட பணத்தை அவர்கள் மனைவிக்கு நகை வாங்கவோ அல்லது வீடுவாசல், சொத்துக்கள் வாங்கவோ செலவழிக்க வில்லை. பாடசாலைகள், மதஸ்தலங்கள், பொது அமைப்புக்கள், பொதுத்தளங்கள், தேவையுடைய இடங்களின் விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கே பயன்படுத்தினர். இந்த நிதி வயிறூதியவனுக்கு காத்துப்போனது போல இருந்ததே தவிர முழுமையாக தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை என்பதை தயாசிரிக்கள் மட்டுமல்ல எமது சமூகத்தின் செல்லாக்காசுகளும் கூட தெரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கை அபிவிருத்தி செய்ய இன்னும் பல நூறு கோடி மில்லியன்கள் நிதி ஒதுக்கீடு தேவை. அதை ஒதுக்க ஜனாதிபதி ரணில் முன்வர வேண்டும். அந்த நிதியை நீதி தவறாமல் அமைச்சுக்கள், திணைக்களங்கள் பயன்படுத்தி மக்களை மேம்படுத்த வேண்டும். இதுவேதான் இன்றைய தேவை.

தயாசிறி எதிர்கால தேசத்தலைவர் எனும் நிலையிலிருந்து தன்னை நேற்று மூத்த இனவாதியாக காட்டி அந்த அந்தஸ்த்தை நேற்று பாராளுமன்றில் வைத்து இழந்திருக்கிறார். தனது கட்(சை)சி நாறிக்கிடக்க மற்ற கட்சிகளுக்குள் மூக்கை ஓட்டி பார்த்த தயாசிறி சான் ஏறி முழம் சறுக்கி இருக்கிறார். தயாசிறி இனியாவது தனது இனவாத பாதையிலிருந்து வெளிவர வேண்டும். மறைமுகமாக இருந்து அவரை ஏவி விட்ட எமது சக்திகளுக்கு அவர்களின் பருப்பு வேக இன்னும் நெருப்பு தேவை என்பதை காலம் உணர்த்தும் என்பது திண்ணம்.

நூருல் ஹுதா உமர்

Related posts

நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்