உலகம்உள்நாடு

குவைத்தில் பாரிய தீ விபத்து 35 பேர் பலி

குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளமையால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபா தீக்கிரையாகிய கட்டடத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டட உரிமையாளர்களின் பேராசை இதுபோன்ற விபத்துக்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Jazeera

Related posts

பெளர்ணமி தினத்தில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது