உள்நாடுவிளையாட்டு

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க

2024 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

160 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தமது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

எமது அணியின் பலம் பந்து வீச்சு. கடந்த போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசி பல போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளோம். அதனால்தான் நாம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து. பந்து வீச்சில் எதிர் அணியை வீழ்த்த திட்டமிட்டோம். எமது இலக்கு 160 க்கும் அதிக ஓட்டங்களாக இருந்தது. எனினும் இந்த மைதானத்தை பொருத்த வரையில் எமது ஓட்ட இலக்கு 130 ஆக இருந்திருக்க வேண்டும். அதனை பின்னரே சுதாகரித்தோம். இந்த மைதானத்தை பொறுத்த வரையில் 130 என்பது 180 க்கும் அதிகமான ஓட்டங்களுக்கு சமமாகும். எவ்வாறாயினும், இரண்டாவதாக பந்து வீசி நாம் பாரிய அழுத்தத்தை எதிரணிக்கு கொடுத்திருந்தோம். எடுத்த தீர்மானித்தில் உள்ள தவறை விட, எமது ஓட்ட இலக்கில்தான் தவறு உள்ளது என நான் நினைகிறேன். என்றார்.

Related posts

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!

நிதி அமைச்சின் அறிவிப்பு