உள்நாடு

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வருத்தமானிக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03.06.2024)  உத்தரவு பிறப்பித்துள்ளது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தொழில் அமைச்சு கடந்த மாதம் 21 ஆம் திகதி வர்த்த மணி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

 இந்த வருத்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி  21 பெருந்தோட்ட நிறுவனங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித்த ராஜா கருணா மற்றும் தமிக்க கணேபொல ஆகியோர்  முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ்  டி சில்வா மற்றும் தொழிற்சங்க ஜனாதிபதி சட்டத்தரணி சார்பில் பைஷர் முஸ்தபாவும் ஆஜராகி இருந்தனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என தன்னிச்சையாக முடிவினை எடுத்து  அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவற்றதாக்கி  எழுத்தாணை பிறப்பிக்குமாறு மனுதாரர் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பள உயர்வினை வழங்கும் பொழுது தோட்ட நிறுவனங்கள் முழுமையாக செயலிழந்து விடும் நிலை உருவாகும் எனவும் மனுதாரர்கள் சார்பில் மன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தடை உத்தரவு வழங்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள்  தெரிவித்துள்ளனர்.

 அதேநேரத்தில் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உள்ள நீதிமன்றம் அன்றைய தினத்தில் பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நோட்டீஸ் அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாயகார, அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,பெருந்தோட்ட நிறுவனங்கள் என  52 பேரை ஆஜராகுமாறு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. TW

Related posts

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

பெண்ணின் DNA அறிக்கை வெளியானது