வணிகம்

தேசிய சுற்றாடல் வாரம்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன்  மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்படவிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகைக்கு அமைவாகவே சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

ஜூன் மாதம் 5 ஆம் திகதி சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இயற்கையுடன் ஒன்றிணைந்த மக்கள் என்பதே இம்முறை தொனிப்பொருளாகும்.

சர்வதேச சுற்றாடல் தினத்திற்கான தேவிய வைபவம் ஜூன் மாதம் 5ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது

Related posts

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி

மீன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகின்றது

முருங்கைக்காய் அமோக விளைச்சல்