உள்நாடுசூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஏழுவயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிற 78 மற்றும் 36 வயதான இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், கம்பஹா – பல்லேவல – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (01) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகிறது.

வடமேற்கு மாகாணத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் எனவும் அதிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

களனி, தலுகம பிரதேசத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டம்

இலங்கையில் நிலநடுக்கம்!

புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு