உள்நாடு

தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த மாதம் முதல் பிரச்சாரப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.


தொகுதி அடிப்படையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வது முதல், மாவட்ட ரீதியில் பிரதான பிரச்சாரக் கூட்டங்களை நடாத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


எவ்வாறெனினும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஜனாதிபதி தரப்பிலோ அல்லது பொதுஜன முன்னணி தரப்பிலோ இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது.

அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்

editor

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி