உள்நாடு

பாதாள உலக குழுவினருக்கான கடவுச்சீட்டில் இவ்வளவு மோசடியா?

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இரண்டு வகையான கடவுச்சீட்டுகளிலும் ஒரே மாதிரியான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குடிவரவுத் திணைக்களத்தின் தரவு அமைப்புக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக விசேட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழுவினருக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் போதே இவ்வாறு தெரியவந்துள்ளது.

பல அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 20 எனவும் அதில் 14 டுபாய் பாதாள உலகக் குழுவினரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த போலி கடவுச்சீட்டிற்காக ஐந்து லட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பணிபுரியும் நிர்வாக சேவை அதிகாரிகள் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் கைது செய்தது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய வேறு சிலரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்யும் போது சில தரப்பினர் பலத்த அழுத்தம் பிரயோகித்து கைது செய்வதைத் தடுக்க முயன்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தரவு அமைப்பு இருந்தும், டுபாயில் பாதாள உலகக் குழுவினர் தயாரித்த போலி கடவுச்சீட்டிலும் உண்மையான கடவுச்சீட்டிலும் ஒரே கைரேகையை ஊழல் அதிகாரிகள் பதித்துள்ளனர்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள தரவு அமைப்புகளை வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர்கள் பணத்திற்காக தரவு அமைப்புகளையும் மாற்றுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்

கல்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்