உள்நாடு

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து நான் எடுத்த அதிரடி தொழிற்சங்க நடவடிக்கையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு உடனடியாக தொழில் வழங்க களனிவெளி தோட்ட கம்பனி இணக்கம் தெரிவித்ததுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

உடரதல்ல தோட்டத்தில் இலக்கம் 05 தேயிலை மலையில் தேயிலையை அகற்றி அங்கு கோப்பி பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உடரதல்ல தோட்ட நிர்வாகம் அங்கு தான்தோன்றி தனத்தை கையாண்டுள்ளது.

இதனால் கடந்த ஒருமாத காலமாக அத் தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தவடன்
எனது கவனத்திற்கும் கொண்டு வந்தனர்.

அத்துடன் உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை பிடுங்க தோட்டத்திற்குள் JCP இயந்திரத்தை கொண்டு வந்த நிலையில் அதை தடுத்து நிறுத்திய தோட்ட தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட மூவர் மீது தோட்ட நிர்வாக அதிகாரி பொலிஸ் முறைப்பாடு செய்து தொழிலாளர் பிரச்சினையை பொலிஸ் பிரச்சினையாக மாற்றியிருக்கிறார எனது கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள தொழிற் சங்கம்,
தோட்ட நிர்வாகம் மற்றும் தொழில் திணைக்களம் இணைந்து தீர்வுகளை பெறவேண்டும் மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக
தொழிற்சங்க பிரச்சினையில் பொலிஸார் தலையிடுவதை தவிர்த்து கொள்ளவேண்டும் என நான் எச்சரித்தேன்.

ஒருமாத காலத்தை தொட்ட பணி பகிஷ்கரிப்பிற்கு தீர்வு பெறும் வகையில் நேற்றைய தினம் (30.05.2024) நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் தோட்ட நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தையை உதவி தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடத்தினேன்.

இந்த பேச்சு வார்த்தையில் நான் தொழிற்சங்க சார்பாக கலந்துக் கொண்டேன்.

இருப்பினும் இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இரு தரப்பினரிடத்திலும் இணக்கப்பாடு எட்டவில்லை என்பதால் நான் வெளிநடப்பு செய்தேன்.

அதேநேரத்தில் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகம் பொலிஸ் நடவடிக்கை எடுத்தது தவறு என சுட்டிக்காட்டி நுவரெலியா பொலிஸ் நிலைய தலமையக பொறுப்பதிகாரி காரியாலயத்திற்கு சென்று முறையிட்டேன்.

அதேநேரம் தொழிற்சங்க நடவடிக்கையில் பொலிஸார் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் என பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன்.

அதேசந்தர்ப்பத்தில் உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்க தொழிற்சங்க நடவடிக்கையை அதிரடியாக ஆரம்பித்தோம்.

மேலும் இதற்கென கலனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணியாற்றுவர் ஆனால் தொழிற்சாலையிலிருந்து தேயிலை தூளை கொண்டு செல்வதை நிறுத்துவார்கள் என்ற தொழிற்சங்க நடவடிக்கையை திட்டவட்டமாக தெரிவித்தேன்.

அதேநேரம் களனிவெளி நிர்வாகத்துக்குரிய தோட்ட தொழிற்சாலைகளில் இருந்து தேயிலை தூளை விற்பணைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு நாங்கள் தடை விதித்தோம்.

இந்த நிலையில் கொந்தளித்த தோட்ட தொழிலாளர்கள் நானு ஓயா,நுவரெலியா பீட்று ஆகிய தோட்டங்கள் உள்ளிட்ட பல தோட்டங்களில் தொழிற்சாலைகளின் பிரதான வாயிலை மூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது நுவரெலியா பீட்று தோட்டத்தில் களம் இறங்கிய எனது தலைமையிலான இ.தொ.கா குழுவினர்கள் கட்சி பேதமின்றி ஆர்பாட்டத்திலும் ஈடுப்பட்டோம்.

இதை தாங்க முடியாத களனிவெளி தோட்ட நிர்வாக உயர் அதிகாரிகள் சுமுகமான பேச்சுவார்த்தைக்கு அடங்கி வந்ததுடன் உடரதல்ல தோட்டத்தில் பணியிடை நீக்கப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு தொழில் வழங்க சுமுகமாக ஒப்பு கொண்டனர்.

மேலும் வேறொறு தினத்தில் ஏனைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண ஒத்து வந்தனர் இதனால் ஒரேநாளில் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு வெற்றி கிடைத்தது.

இதையடுத்து அதிரடி தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டோம் கட்சி பேதமின்றி தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றுபட்டால் தீர்வை பெறமுடிந்தது.

#CWC #jeevanthondaman #JT #SL #lka

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 58 பேர் குணமடைந்தனர்

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO]

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!