அரசியல்உலகம்

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!

உலங்கு வானூர்தி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு (Ebrahim Raisi) அஞ்சலி செலுத்துவதற்காக உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்கா (US) புறக்கணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுடன் (Iran) பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இதுபோன்ற மோசமான மனித உரிமை மீறல்களை செய்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை ஈரான் மக்களுடன் நிற்க வேண்டும் எனவும், அவ்வாறான ஒருவரை கௌரவிக்கக் கூடாது எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி காலமானார்

அஸ்ட்ரா ஜெனகா தொடர்பில் WHO இனது நிலைப்பாடு

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் மனு 30 ஆம் திகதி விசாரணைக்கு

editor