உள்நாடு

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பிராந்திய நாடுகளில் முன்னணியிலிருக்கும் இலங்கை, ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலை இந்திய ஊடக அமைப்பான ‘டைம்ஸ் ஒஃப் இந்தியா’ வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

நாட்டின் கலாச்சார பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், செழிப்பான தேயிலை தோட்டங்கள் மற்றும் பலதரப்பட்ட வனவிலங்குகளுக்கு பெயர் பெற்ற ஒரு நாடாக இலங்கை அமைந்தள்ளது. 

இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், நேபாளம், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இவ்வருடம் மே மாதத்தில் இதுவரையில் 79,431 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளனரென தெரியவந்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு

தேர்தல் நடக்க வாய்ப்பில்லை? ரணிலின் புதிய அறிவிப்பால் பரபரப்பு

கொரோனா வைரஸ் – தகவல்களை மறைத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை