வகைப்படுத்தப்படாத

கால நிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் தென்கிழக்கு திசையாக நிலவும் கருமேகக் கூட்டங்கள் காரணமாக நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் இன்று கடும் மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்று மணிக்கு 60முதல் 70 கிலோ மீற்றர் வேகத்துடன் வீசலாம். அந்தச் சந்தர்ப்பத்தில் கடற்பிரதேசங்களில் இடையிடையே கொந்தளிப்பு நிலவலாம்.

இது தொடர்பில் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு தாழ்வாரப் பிரதேசங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

දුම්රිය ප්‍රවේශ පත්‍ර ගාස්තු ඉහලට ?

Commander meets ‘Paada Yathra’ pilgrims in Yala

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்