இந்தியாவின் (India) அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையை (Sri Lanka) சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த மேலதிக விசாரணைக்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இரண்டு பேரை இலங்கை பொலிஸார் தடுத்து வைத்துள்ள நிலையில், அவர்களையும் விசாரணை செய்யும் வகையில் குஜராத் பொலிஸாரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.
இதேவேளை ஓஸ்மண்ட் ஜெரார்ட் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதோடு அவரை கைது செய்வதற்காக 2 மில்லியன் ரூபாயை இலங்கை அரசாங்கம் வெகுமதியாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் பாகிஸ்தானை சேர்ந்த அபுதா என்ற மதப்போதகர் சுமார் 42 நாட்களாக போதனைகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுக்கும் இந்தியாவில் உதவியதாக கூறப்படும் மூன்று பேர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி தகவல்களுக்கு அமைய, பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் வழியாக ஒரு ஆயுதம் வழங்கப்பட்டமை தொடர்பான விடயம் தற்போது விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணையின் பல்வேறு கோணங்களைத் தொடர மூன்று பொலிஸ் அணிகள் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.