உள்நாடு

புத்தளம் பிரதேச செயலாளரை அச்சுறுத்திய அலி சப்ரி ரஹீம் MP!

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை சிலர் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த இடத்திற்குச் சென்ற புத்தளம் பிரதேச செயலாளர் சம்பத் வீரசேகரவை,பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழைய மன்னார் வீதியில் புத்தளம் தனியார் உப்பளத்திற்கு முன்பாக உள்ள 10 ஏக்கர் காணிக்குள் யாரும் பிரவேசிக்கக் கூடாது என பிரதேச செயலாளர் தடை விதித்திருந்த நிலையில் காணி கம்பி பொருத்தப்பட்டுள்ளதா எனச் சோதனையிட சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச செயலாளர் காணி வியாபாரிகளுடன் சேர்ந்து இந்த காணியை ஆக்கிரமிக்க முயல்வதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவித்தார்.

தனது அறிக்கையில் அலி சப்ரி ரஹீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான காணிகளை கபலிகரம் செய்யும் புரோக்கர்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம்.
மன்னார் வீதி காணிகள் சம்பந்தமாக எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு அலிசப்ரி ரஹீம் அவர்கள் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் மற்றும் அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை சீரணித்துக்கொள்ள முடியாத சில சமூகவிரோத சக்திகள் கடந்த பல தினங்களாக கிழகரை காணிகள் அமைந்திருக்கும் இடங்களில் குழப்ப நிலையை உருவாக்குவதற்கு தொடரான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணி உரிமையாளர்களை மிரட்டுதல், ஊழியர்களை காணிகளிலிருந்து விரட்டியடித்தல் போன்ற பல்வேறு அராஜகங்கள் இடம்பெற்றுள்ளன. நமது கிழகரை அங்கத்தவர்கள் தமது காணிகளை அடைந்து கொள்ளப் போவதன் ஒரு முன்னோடி சமிக்ஞையாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது காணி புரோக்கர்களுடன் பிரதேச செயலாளர் குறித்த இடத்திற்கு வருகை தந்தமை தவறு என்று குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் இது தொடர்பாக குறித்த குழுக்களுடன் இணைந்து அரச மட்டத்தில் இதனை நன்கு ஆராய்ந்து உரியவர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் இவ்விடத்தில் வலியுறுத்தி கூறினார்.

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

காலியில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது