அரசியல்உள்நாடு

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் நாடு சோமாலியாவின் நிலைக்குச் சென்றமைக்கு, மக்கள் தவறாக வாக்களித்து பல மோசமான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தமையே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கொரோனா இடர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் தங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் தாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு