அரசியல்உள்நாடு

பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்

அரசாங்கத்தினால் அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேசிய மக்கள் சக்தியினால் உச்ச நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதாரம் தொடர்பான பாரதூரமான ஓர் சட்டம் மிகவும் எளிமையான அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முதலீட்டுச் சபை 

மேலும் இலங்கை முதலீட்டுச் சபையை ரத்து செய்யவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் ஏன் அவசரமாக இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

தனியார் துறையினர், கைத்தொழிற்துறையினர் அல்லது முதலீட்டுச் சபை இவ்வாறான ஓர் சட்ட மூலத்தை கோரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]