(சர்ஜூன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம் ஒன்றை அவரது தொகுதியான கல்முனையில் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுத்திருந்தார். அதற்கான அறிவிப்பு கடந்த வரம் வெளியாகியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகமமைக்க தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸை தொடர்புகொண்டு பொருத்தமான இடம், மதிப்பீடு, வரைபட நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை (17.05.2024) ஜனாதிபதி செயலகம் அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிணங்க பொருத்தமான இடம் அடையாளங்காணப்பட்டு மதிப்பீட்டு நடவடிக்கை, வரைபட வேலைகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உண்மைநிலைகளை அறியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிவருவதுடன் இந்த வேலைத்திட்டத்தை முடக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.