வகைப்படுத்தப்படாத

நெல் உற்பத்தியானது 4.4 மில்லியன் தொன்களுக்கு வீழ்ச்சி

(UDHAYAM, COLOMBO) – 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு நாட்டின் நெல் உற்பத்தியானது 4.4 மில்லியன் தொன்களுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

8.3 சதவீதமாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல் விளைச்சலானது 2015 ஆம் ஆண்டில் எக்டேயர் ஒன்றிற்கான 4 கிலோ 428 கிராமிலிருந்து 2016 ஆம் ஆண்டில், எக்டேயர் ஒன்றிற்கு 4 கிலோ 372 கிராமிற்கு வீழ்ச்சியடைந்திருந்தது.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பெரும்போகத்திற்கான நெல் உற்பத்தியானது 2.9 மில்லியன் மெற்றிக் தொன்னாகக் காணப்பட்டதுடன், இது முன்னைய பெரும்போக உற்பத்தியை விட  0.9 சதவீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ඉන්ධන මිල පහළට

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு