உள்நாடுபுகைப்படங்கள்

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

பேருவளை, சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கம், சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், “ஜெம் ஸ்ரீலங்கா” சங்கம் மற்றும் சீனங்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களின் பங்களிப்புடன் காசா சிறுவர் நிதியத்திற்கு ரூ. 40,198,902 நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கான காசோலை நேற்று புதன்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சீனங்கோட்டை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீலினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் பேருவளை பிரதேச வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.

 

Related posts

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா

இலங்கைக்கு அதிரடி வெற்றி

ஆரம்ப பிரிவு மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி