உள்நாடு

புத்தளத்தில் 32,710 பேர் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப்பெருக்கினால் 8,780 குடும்பங்களைச் சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலகப் பிரிவில் 78 கிராம சேவகர் பிரிவில் 8,780 குடும்பங்களை சேர்ந்த 32,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 12 கிராம சேவகர் பிரிவில் 6,815 குடும்பங்களைச் சேர்ந்த 25,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

கொழும்பு வாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.