அரசியல்உலகம்உள்நாடு

ஈரான் ஜனாதிபதிக்காக ஐ.நாவில் மெளன அஞ்சலி – இலங்கை, இந்தியாவில் துக்க தினம்

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது குழுவினருக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த மாதம் சுழலும் கவுன்சில் தலைவர் பதவியை வகிக்கும் மொசாம்பிக் தூதர் பெட்ரோ கொமிசாரியோ அபோன்சோ இந்த மௌன அஞ்சலியை செலுத்துமாறு தனது குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அவரது குழுவினரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பல்வேறு தேசிய தலைவர்களும் அவர்களது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளைய தினம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

editor

UPDATE – தகவல் தொழிநுட்ப சங்கத்தின் தலைவருக்கு பிணை

பிரிட்டனின் இணையனுசரணை நாடுகளுடனான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்பு!