இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமருக்கு பிடியபாணை பிறப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களான இஸ்மாயில் ஹனியே, யேயா சின்வார், முகமது டெய்ஃப் ஆகியோர் காஸா மற்றும் இஸ்ரேலில் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கு பொறுப்பேற்க வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்குரைஞர் கரிம் கான் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தடை செய்வதன் மூலம், மக்களை தவிக்கச்செய்வதை போர்க்கால உத்தியாகக் கையாள்வதாகவும் இஸ்ரேல் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக, பாலஸ்தீன பச்சிளங் குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் அதிகளவில் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.