அரசியல்உள்நாடு

“ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது”

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமுள்ள திகதிகள் குறித்து – தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தியதாகவும், சனிக்கிழமைகளில் வரும் அந்த இரண்டு நாட்களையும் பரிசீலித்து வருவதாகவும் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும் சன்டே டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில், அரசியலமைப்பின் விதிகள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

சட்டப்படி, இந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு வேட்புமனுத் தாக்கல் திகதியை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

அறிவிப்பு வெளியான 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும். சட்ட விதிகளின் படி தேர்தல் பிரச்சாரத்துக்கு – குறைந்தபட்சம் 28 நாட்களும் அதிகபட்சம் 42 நாட்களும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சண்டே டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக அவர்கள் 10 பில்லியன் ரூபாயை கோரியுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப தரும் அடிப்படையில் நிதியைக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் செலவுகள் அதிகமாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்; “வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதிக வேட்பாளர்கள் இருந்தால், வாக்குப்பதிவு நடத்துவதற்கான நேரமும் அதிகரிக்கும்” எனவும் தெரிவித்தார்.

Related posts

ஹொரணவில் அதி பாதுகாப்பு சிறைச்சாலை

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவை சந்தித்தனர்

editor

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்