உள்நாடு

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை

இந்தியா – இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 13 ஆம் திகதி இந்த படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரணங்களால் இன்று (17) வரை ஒத்திவைப்பதாக கப்பல் சேவை நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

எனினும் எதிவரும் 19ஆம் திகதி வரை  மீண்டும் அந்த படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், இவ்வாறு படகு சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்