உள்நாடு

இரட்டைக் குடியுரிமை -மாட்டிக்கொண்ட 10MPக்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் தற்போது இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு – அவர்கள் தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” எனவும் சோபித தேரர் ஊடகங்களுக்குத் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்துக்குச் செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் – சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்கள் தமது பிரதிநிதிகளை கவனமாக தெரிவு செய்யுமாறு வலியுறுத்திய சோபித தேரர், “இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என, மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

சாரதி அனுமதிப்பத்திரம் பெற புதிய பரிசோதனைக்கான!

உதவிய அனைவருக்கும் நன்றி – ரிஷாதின் திறந்த மடல்