உள்நாடு

கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர்  ரொஷான் ராஜதுரை தோட்ட தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததையடுத்தே, அதனை மறுத்து செந்தில் தொண்டமான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தபோது சம்பள உயர்வு வழங்க முடியாது என ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்து வந்தன. கடும் அழுத்தத்துக்கு பிறகு ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயார் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதையடுத்து, வேறு வழியின்றி தற்போது கம்பனிகள் 1200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க முன்வந்துள்ளனர்.

ஒரு வருட காலமாக ஒரு ரூபாய் சம்பள உயர்வு கூட வழங்க முடியாது என தெரிவித்த கம்பனி, தற்போது 200 ரூபாய் அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம், அரசாங்கத்தால் அரச வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். ஆதலால் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை இயக்குநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]