உள்நாடு

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதன்படி  முன்மொழியப்பட்டுள்ள நான்கு வேட்பாளர்கள் தொடர்பில் எதிர்வரும்வரும் வாரம் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் மே மாதம் பேரணி உட்பட பல முக்கிய நிகழ்வுகளில் தம்மிக்க பெரேரா முன்வரிசை ஆசனத்தில் பிரசன்னமாகியிருந்தமை கட்சி உறுப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது!

Related posts

எகிறும் பாராளுமன்ற கொத்தணி : வாசுதேவவுக்கு தொற்று

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – நீதிமன்றில் வெளியாகும் முக்கிய சாட்சிகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு