அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், வருமானத்துக்கேற்ப வரி (விற்றுமுதல் அல்லது கொள்முதல் வரி) விதிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வௌ்ளிக்கிழமை (10) கொழும்பில்நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, அனுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அனுரகுமார திசாநாயக்கவினால் திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புரள்வு வரி விதிக்கும் முறையே இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்த நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் விற்றுமுதலுக்கு வரி விதிக்கப்படுகின்றது. இது போன்று இல்லாத நாடு உலகில் இல்லை .
அனுரகுமார திசாநாயக்க வந்து தாம் நினைக்கும் வகையில் பொருளாதாரத்தை கையாண்டால் இந்த நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் தற்போது வழங்கி வரும் வரிச்சலுகைகளுக்கும் ஆபத்து ஏற்படும் இந்த நாட்டில் மட்டுமல்ல.
உலகத்தின் மொத்த விற்றுமுதல் மீதும் வரி விதிக்கப்படுகிறது. அது இல்லாமல் எங்கும் வரி வசூலிக்கும் நாடு இல்லை. அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணர்கள், புரள்வுக்கு வரி விதித்தால் நன்றாக இருக்கும், தற்போது அவ்வாறான நடைமுறை இல்லை.
எனவே நாம் ஆட்சிக்கு வந்தால் அதனைத் தொடங்குவோம் என்று கூறியிருப்பார்கள்” என்றார்.