உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.Muslimaffairs.gov.lk இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் Z.A.M.பைசல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கா கலந்துகொண்டு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் முதுநபீன், அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்ள், ஹஜ், வக்பு சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெளத்த, இந்து, கத்தோலிக்க திணைக்களங்களின் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் Z.A.M.பைசல்,
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கா ஆகியோர்கள் உரையாற்றினர்

Related posts

“இலங்கையை யாசகம் பெறும் நாடாக மாற்றுவதற்கு தாம் தயாரில்லை” ஜனாதிபதி ரணில்

ரயில் சேவை ஸ்தம்பிக்கும் நிலை

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று