முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை எதிவரும் 29ம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உப தலைவர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மனுவினை தாக்கல் செய்திருந்ததார்.