உள்நாடு

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமண செய்தவருக்கு நேர்ந்த கதி: சினிமா சம்பவம் போல்

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாத வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கும் பல்வேறு அழுத்தங்களை தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் அழுத்தம் காரணமாக மீண்டும்  இலங்கை திரும்பிய தம்பதி, கொழும்பில் வசித்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் அடையாளப்படுத்தியவர் வந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related posts

இன்று விசேட வங்கி விடுமுறை

நான்கு மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு